சீனாவின் கனவுக் கால்வாய் திட்டத்திற்குத் தடை..! நீர்மூழ்கிக் கப்பலுக்கும் தடை..! தாய்லாந்தின் இரட்டை அடியால் கதிகலங்கியுள்ள சீனா..!

4 September 2020, 1:48 pm
Isthmus_of_Kra_UpdateNews360
Quick Share

மலாக்கா ஜலசந்திக்கு மாற்றாக சீனா உருவாக்க விரும்பிய கிரா கால்வாய் திட்டத்தை நிறுத்துவதாக தாய்லாந்து அறிவித்த பிறகும் சீனாவின் மலாக்கா குழப்பம் தொடர்கிறது. லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர், இந்திய கடற்படை தனது முன்னணி கப்பல்களை மலாக்கா ஸ்ட்ரெய்ட்ஸ் என்ற மூலோபாய செக்பாயிண்ட் வழியாக அனுப்பியது.

இந்தியாவுடனான மோதலுக்கு மத்தியில் இது சீனாவுக்கு இரட்டை அடியாக வருகிறது.

724 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதை தாய்லாந்து அரசாங்கம் தாமதப்படுத்தியுள்ளது. பியூ தாய் கட்சி மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தை அடுத்து தாய்லாந்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எதிர்ப்புக்கு அடிபணிந்த தாய்லாந்து :
கிரா கால்வாய் திட்டம், தாய்லாந்தின் இஸ்த்மஸ் ஆஃப் கிரா வழியாக 120 கிலோமீட்டர் மெகா கால்வாய் வெட்டுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருந்தால், சீனாவிற்கு ஒரு முக்கியமான மூலோபாய சொத்தாக இது மாறியிருக்கும். இதன் மூலம் சீனக் கடற்படை தென் சீனக் கடலில் புதிதாக கட்டப்பட்ட தளங்களுக்கு சுதந்திரமாகவும் விரைவாகவும் செல்ல அனுமதிக்கும் வேளையில், இந்தியப் பெருங்கடலை அணுகுவதும் எளிதாக இருந்திருக்கும்.

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களைப் பிரிக்கும் மலாய் தீபகற்பத்திற்கும் இந்தோனேசிய தீவான சுமத்ராவிற்கும் இடையிலான ஒரு குறுகிய புள்ளியான மலாக்கா ஜலசந்தியைத் தவிர்ப்பதன் மூலம் மலாக்கா சங்கடத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சீனாவின் பிரதிபலிப்பே இந்த திட்டமாகும்.

கிரா கால்வாய் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சாத்தியமற்றதாக மாறியுள்ளதால் தாய்லாந்து இனி அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

வெளியுறவுக் கொள்கையின் ஒரு அறிக்கையின்படி, இந்த கால்வாய் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் கம்போடியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. அவை சீன தலையீட்டால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒப்பீட்டளவில் பலவீனமான சிவில் சமூகங்களைக் கொண்டுள்ளன.

இந்தோ-பசிபிக் பகுதியில் முக்கிய நட்பு நாடுகளை இழக்கும் சீனா :
கால்வாயை ரத்து செய்வதைத் தவிர, ஏழு ஆண்டுகளில் 720 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இரண்டு யுவான்-வகுப்பு எஸ் 26 டி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க தாய்லாந்து திட்டமிட்டிருந்த நிலையில் அதையும் தாமதப்படுத்தும் வகையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிதியாண்டிற்கான நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் நிதியை பூஜ்ஜியமாகக் குறைக்க ராயல் தாய் கடற்படை பாராளுமன்றத்தின் பட்ஜெட் குழுவிடம் கூறியது. பாதுகாப்பு மந்திரி பதவியை வகிக்கும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா, கடற்படைக்கு ஒப்பந்தத்தை 2022 நிதியாண்டு வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த புதிய முன்னேற்றங்கள் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது கட்டுப்பாட்டை வலுவாக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதால், சீனா விரக்தியில் உள்ளது.

Views: - 7

0

0