இந்தியா வரும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி..! ரஷ்யாவுடன் கைகோர்க்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம்..!

16 September 2020, 5:19 pm
russia_coroanvirus_vaccine_sputnik_v_updatenews360
Quick Share

டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி’யின் மருத்துவ சோதனை மற்றும் விநியோகத்தை இந்தியாவில் மேற்கொள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்கும்.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை சொந்தமாக தயாரித்து பரிசோதித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்கை இந்தியாவில் சோதனை செய்யவும்  விநியோகிக்கவும், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, சோதனைகள் மற்றும் விநியோக ஒப்பந்தம் இரண்டும் மத்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பொறுத்தது. மேலும் சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், இந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்த தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கும்.

“கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது. மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு நமது ஸ்புட்னிக் தடுப்பூசி மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ரஷ்யா முதலீட்டு நிதியத்தின் லைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த உலகின் முதல் நாடு ரஷ்யா. கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கிய இந்த தடுப்பூசி, அனைத்து சோதனைகளையும் முடித்து ரஷ்யாவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முழு அளவிலான உற்பத்தி செப்டம்பரில் தொடங்கவிருப்பதாக அப்போது கூறினார்.

Views: - 14

0

0