டிரைவர் முதல் சிஇஓ வரை அனைவரும் கோடீஸ்வரர்கள்..! இப்படியும் ஒரு நிறுவனமா..?

1 December 2020, 7:57 pm
MATTHEW_MOULDING_THE_HUT_Updatenews360
Quick Share

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதன் ஊழியர்களின் வளர்ச்சியிலும் மன மகிழ்ச்சியிலும் தான் உள்ளது. ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள பல நிறுவனங்கள், கொண்டாட்டங்கள், விடுமுறைகள் மற்றும் போனஸ் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

ஆனால் ஒரு முதலாளி இதற்கு ஒருபடி மேலே போய், நிறுவனத்தின் பங்குகளை தனது செயலாளர் முதல் நிறுவனத்தின் கடைக்கோடி பியூன் வரை பங்கிட்டுக் கொடுத்து, அனைவரையும் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி ஹட் குரூப் நிறுவனம் :

பிரிட்டனின் மான்செஸ்டரில் அமைந்துள்ளது தி ஹட் குரூப் நிறுவனம். இது கடந்த 2004’இல் 32 வயதான மேத்யூ மோல்டிங் என்பரால், ஜான் காலிமோர் என்பவருடன் இணைந்து தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிடிகேசட்டுகளை  நிறுவனமாக தொடங்கப்பட்ட இது பின்னர் அசுர வளர்ச்சி கண்டு, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை விற்று வருகிறது. 

இந்த நிறுவனம் தற்போது 164 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் மேத்யூ மோல்டிங், தனது நிறுவனம் வளர வளர, நிறுவனத்தின் பங்குகளில் சுமார் ஐந்து சதவீத பங்குகளை தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். இதில் தலைமை அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் அடக்கம்.

பங்குச் சந்தையில் தி ஹட் குரூப் நிறுவனம் :

இந்நிலையில் கடந்த செப்டம்பரில் தி ஹட் குரூப் நிறுவனம் பிரிட்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட இந்த இரண்டு மாத காலத்தில் அனைத்து கணிப்புகளையும் தாண்டி பங்குகளின் விலை மளமளவென உயர்ந்தது. 

இதனால் இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்த கடைக்கோடி பியூன் முதல் தலைமை அதிகாரி வரை அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். 

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், மேத்யூ மோல்டிங்கின் உதவியாளர் ஒருவர், தனது 36 வயதிலேயே பணி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது தான். நிறுவனத்தின் பங்குகள் மூலம் அவர் பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார்.

ஒரு நிறுவனத்தின் கடைக்கோடி ஊழியர் முதல் தலைமை அதிகாரி முதல் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

Views: - 25

0

0