தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு.. !!

24 January 2021, 9:10 am
EarthQuake_UpdateNews360
Quick Share

ஸ்காட்லாந்து: தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிலியின் உள்துறை அமைச்சகம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

சிலி தலைநகர் சாண்டியாகோவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகம்பத்தின் மையப்பகுதி 61.7 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 55.6 டிகிரி மேற்கு தீர்க்கரேகை ஆகியவற்றில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

Views: - 7

0

0