அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி எலன் மஸ்க் அமெரிக்க டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.
இந்நிலையில் டிரம்புடன் இணைந்து நடனமாடும் வீடியோவை, எலன் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‘எங்களை வெறுப்பவர்கள் ஏ.ஐ என சொல்லக்கூடும்’ என பதிவிட்டுள்ளார். கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் ‘ஸ்டேயிங் அலைவ்’ என்ற பாடலுக்கு எலன் மஸ்கும், டிரம்பும் நடனம் ஆடும் காட்சியை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் ‘ஏ.ஐ’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை எலன் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைவரையும் கவர்ந்தது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.