ஜன்னலை உடைத்து பாத்ரூமுக்குள் விழுந்த ஸ்வான்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய பாட்டி

26 January 2021, 9:31 am
Quick Share

பிரிட்டனில் ஒரு வயதான பெண் லாட்ஜின் குளியலறைக்குள் குளித்து கொண்டிருந்த போது, பெரிய ஸ்வான் ஒன்று கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் வந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில், அந்த பாட்டிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் ஸ்வானுக்கு டஜன் கணக்கில் தையல் போடும் அளவுக்கு பெரிய காயம் ஏற்பட்டது.

பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாம்ஷையரின் ஷாம்ராக் லாட்ஜ்ஜில், ஒரு வயதான பெண் ஒருவர் ரூம் எடுத்து தங்கி இருந்தார். குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி சமபவம் ஒன்று காத்திருந்தது. அந்த பாட்டி, குளித்துக் கொண்டிருந்த போது, பெரிய ஸ்வான் ஒன்று, கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வந்து பாத்ரூமுக்குள் விழுந்தது. நல்லவேளையாக இதில் அந்த பாட்டிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஸ்வான் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து விலங்கு மீட்பு ஆய்வாளர் கீத் எல்லிஸ் கூறுகையில், ‘எனது 40 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டதில்லை. ஆறுகள் என நினைத்து பிஸியான சாலைகளின் மேல் ஸ்வான்கள் பறப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் இது வினோதமான சம்பவம். ஸ்வானை மீட்க சென்ற போது, அங்கு அது அதிர்ச்சியில் இருந்தது. நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது.

நல்ல வேளை அந்த பாட்டி கண்ணாடி அருகில் இல்லை. அப்படி இருந்திருந்தால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். அவர் அதிர்ஷ்டசாலி தான். ஸ்வானுக்கு மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் இறக்கைக்கு கீழ் இருந்த பெரிய காயத்துக்கு, டஜன் கணக்கில் தையல்கள் போடப்பட்டன. சிகிச்சை முடிந்து பறக்கும் நிலைக்கு தயாரானகும் அது மீண்டும் பறக்கவிடப்படும்’’ என்றார்.

Views: - 0

0

0