அசுர வளர்ச்சி கண்ட எலோன் மஸ்க்..! பில்கேட்ஸை முந்தி உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராக உயர்ந்தார்..!

24 November 2020, 1:37 pm
Elon_Musk_UpdateNews360
Quick Share

டெஸ்லா இன்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலோன் மஸ்க், பில் கேட்ஸைத் தாண்டி உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

தொழில்முனைவோராக வாழ்க்கையைத் தொடங்கிய 49 வயதான எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் புதிய உச்சத்தை எட்டியதால் இந்த இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 7.2 பில்லியன் டாலர் உயர்ந்து 127.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது டெஸ்லாவின் பங்கு விலையில் இன்னொரு எழுச்சியால் உந்தப்பட்டது. 

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, எலோன் மஸ்க் இந்த ஆண்டு தனது நிகர மதிப்பில் 100.3 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார். இது உலகின் 500 பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலில் உள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் உள்ள மற்ற எவரையும் விட மிக அதிகமாகும்.

டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலர்களை நெருங்குகிறது. இது அவருடைய அசுரர் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு செய்கிறது.

எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பில் கிட்டத்தட்ட முக்கால்வாசி டெஸ்லா பங்குகளை உள்ளடக்கியது. அவை விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் கார்ப்பரேஷன் அல்லது ஸ்பேஸ்எக்ஸில் உள்ள பங்குகளை விட நான்கு மடங்கு அதிகம்.

இதன் மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், எட்டு ஆண்டு வரலாற்றில் இரண்டாவது முறையாக, இரண்டாவது இடத்தை விட்டு பின்தங்கியுள்ளார்.

இதற்கிடையே அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2017’ஆம் ஆண்டில் முதலிடத்தை எட்டிப்பிடிப்பதற்கு முன்புவரை, பில்கேட்ஸ் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

1 thought on “அசுர வளர்ச்சி கண்ட எலோன் மஸ்க்..! பில்கேட்ஸை முந்தி உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராக உயர்ந்தார்..!

Comments are closed.