டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார் எலான் மஸ்க்… வழக்கு தொடர டுவிட்டர் நிறுவனம் திட்டம்..!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 9:10 am
Quick Share

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முடிவு செய்தார். இதற்காக, டுவிட்டர் நிர்வாகமும் அவருடன் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடந்து வந்தது.

இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் இன்று அதிரடியாக அறிவித்தார். போலி கணக்குகள் கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் இந்த முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொடர உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Views: - 1580

0

0