மனித உரிமைகள் மீறல்: ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை..!!

3 March 2021, 8:36 am
Russia_Protests_UpdateNews360
Quick Share

மாஸ்கோ: ரஷ்யாவின் 4 மூத்த அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அலெக்சி நவால்னி கைது சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டி, ரஷ்யாவின் 4 மூத்த அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதன்படி ரஷ்ய புலனாய்வுக் குழுவின் தலைவர் அலெக்ஸாண்டர் பாஸ்ட்ரிகின், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குழு தலைவர் இகர் கிராஸ்னோவ், தேசிய பாதுகாப்புப் படை தலைவர் விக்டர் ஸோலோடோவ், மத்திய சிறைத் துறைத் தலைவர் அலெக்சாண்டர் கலஷ்னிகோவ் ஆகிய அந்த 4 அதிகாரிகள் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

Views: - 5

0

0