பாகிஸ்தான் அரசுக்கு பெப்பே..! தூதரக கட்டிடத்தை விற்று பணம் பார்த்த கில்லாடி தூதர்..!

25 August 2020, 6:13 pm
Pakistan_flag_updatenews360
Quick Share

இந்தோனேசியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சையத் முஸ்தபா அன்வர், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள தூதரக கட்டிடத்தை 2001-2002 காலப்பகுதியில் மிகக்குறைந்த விலையில் விற்றதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (என்ஏபி) ஆகஸ்ட் 19 அன்று ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சையத் முஸ்தபா அன்வருக்கு எதிராக பொறுப்புக்கூறல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது.

அதில், முன்னாள் தூதர் தூதரக கட்டிடத்தை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால் பாகிஸ்தானின் தேசிய கருவூலத்திற்கு 1.32 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.

பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் அன்வர் கட்டிடத்தின் விற்பனைக்கு விளம்பரம் வெளியிட்டதாகக் கூறுகிறது. தேசிய பொறுப்புக்கூறல் கட்டளைச் சட்டத்தின் 9 (ஏ) 6’ன் கீழ் அன்வர் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜகார்த்தாவில் நியமனம் செய்யப்பட்ட உடனேயே, அன்வர் இந்த கட்டிடத்தை இரகசியமாக விற்கும் பணியைத் தொடங்கினார் என்று பாகிஸ்தானின் உயர் ஊழல் தடுப்பு அமைப்பு குற்றம் சாட்டியது. விற்பனையின் செயல்முறை தொடங்கிய பின்னர், அன்வர் இந்த திட்டத்தை அமைச்சகத்திற்கு அனுப்பினார்.

இருப்பினும், குறிப்புப்படி, பல கடிதங்களில் கட்டிடம் விற்பனை செய்யாமல் அமைச்சகம் தடை விதித்தது.

முன்னாள் தூதருக்கு எதிரான ஊழல் குறிப்புகளை தீர்மானிப்பதில் தாமதத்திற்கு என்ஏபி அலுவலகமே காரணம் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வுக்குப் பிறகு நிர்வாக நீதிபதிக்கு குறிப்பு அனுப்பப்படும்.

முன்னதாக ஜூலை 2020’இல், உச்சநீதிமன்றம் என்ஏபியின் அதிகாரிகளை தாமதம் குறித்து கடுமையாக விமர்சித்ததுடன், ஊழல் குறிப்புகளை உடனடியாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது .

Views: - 43

0

0