நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை

Author: Udhayakumar Raman
29 June 2021, 10:38 pm
Quick Share

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா. 2009 முதல் 2018 வரை அவரது பதவிக்காலத்தில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டின் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராக வில்லை இதனால் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இன்றும் தீர்ப்பின் போது ஜுமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை மேலும் ஐந்து நாட்களுக்குள் ஜுமா தனது சொந்த ஊரான குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள நகண்ட்லாவில் அல்லது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு நீதிமன்றம், துணை தலைமை நீதிபதி ரேமண்ட் சோண்டோ தலைமையிலான விசாரணை ஆணையத்துடன் ஒத்துழைக்க ஜுமா மறுத்ததாக தீர்ப்பளித்து உள்ளது.
முன்னர் ஜுமா பொதுமக்களுக்கு வெளியிட்ட கடிதத்தில், விசாரணை ஆணைய தலைவர் சோண்டோ தனக்கு எதிரானவர் என்றும் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் கூறி இருந்தார்.

Views: - 240

0

0