ஒரே வாரத்தில் 2வது முறையாக சேவை முடக்கம்: மீண்டும் மன்னிப்பு கோரியது Facebook..!!

Author: Aarthi Sivakumar
10 October 2021, 8:37 am
Facebook offers loans as small as ₹500,000 to businesses in India
Quick Share

வாஷிங்டன்: ஒரே வாரத்தில் 2வது முறையாக பேஸ்புக் வலைதள சேவைகளில் தடங்கல் ஏற்பட்டதால் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், மெசஞ்சர் செயலிகள் கடந்த திங்கட்கிழமை உலகளவில் முடங்கின. 6 மணி நேரத்துக்கு பின் இந்த முடக்கம் சரிசெய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் சில இடங்களில் பேஸ்புக் வலைதள சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. இதனால், பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எங்கள் செயலிகள், தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிலருக்கு சிரமம் ஏற்பட்டதை அறிகிறோம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவர முயல்கிறோம். ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Views: - 407

0

0