பயம் ஆளையே காலி பண்ணிடும்.. இந்த மனுஷன பாருங்க..

23 January 2021, 11:54 am
Quick Share

கொரோனா ரிசல்ட் வரும் முன்பே, தனது குழந்தைக்கு அது பரவி விடும் என்ற அதீத பயம் காரணமாக, 27 வயது நிரம்பிய இளைஞர் உயிரிழந்து விட்டார். அவர் இறந்த பின்பு தான், அந்த அன்பான அப்பாவுக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்திருக்கிறது. பயமே தனது கணவனை கொன்று விட்டது என அவரது மனைவி அழுது புலம்புகிறார். பாவம்…

பிரிட்டனின் சர்ரே பகுதியை சேர்ந்த டேவிட் வார்னர் என்ற 27 வயது இளைஞருக்கு சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி வந்திருக்கிறது. இதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு சிகிச்சையுடன், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தனக்கு கொரோனா வந்துவிட்டதாக கற்பனை செய்து கொண்ட வார்னர், ரிசல்ட் வருவதற்கு முன்பே, மருத்துவமனையின் கொரோனா வார்டிலிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆனால், தனக்கு கொரோனா வந்துவிட்டது என நம்பிய அவர், அதனால் தனது 6 மாத செல்ல மகள் எவிக்கும் தன்னிடமிருந்து கொரோனா பரவிவிடும் என பயத்துடன் இருந்திருக்கிறார். இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளான அவர், பயத்துடன் நாட்களை கடத்தி வந்திருக்கிறார். எதிர்பாராத விதமாக, வீட்டின் ஹாலிலேயே தனது உயிரை விட்டிருக்கிறார் வார்னர்.

அவர் இறந்த பின் வந்த கொரோனா ரிசல்ட்டில், அவருக்கு கொரோனா இல்லை என வந்திருக்கிறது. தனது பயமே அவருக்கு எமனாக வந்ததாக, வார்னரின் 21 வயது நிரம்பிய மனைவி விக்கி ஜோன்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருக்கலாம் என நம்பபம்படுகிறது. பாவம்.. நொறுங்கி போய் இருக்கும் அவரின் இளம் மனைவிக்கும், பிஞ்சு குழந்தைக்கும் யார் ஆறுதல் கூறுவது…

Views: - 4

0

0