“இஸ்லாமியவாதிகள் எளிதில் தூங்க முடியாது”..! பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரன் கடும் எச்சரிக்கை..!

22 October 2020, 5:30 pm
Emmanuel_Macron_UpdateNews360
Quick Share

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரன் நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஏற்படுத்தப்பட்டுள்ள பயம் பிரான்சில் இஸ்லாமியர்களின் பக்கங்களை மாற்றப்போகிறது என்றும், இஸ்லாமியவாதிகள் நாட்டில் எளிதில் தூங்க முடியாது என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

“இஸ்லாமியவாதிகள் நம் நாட்டில் எளிதில் தூங்க முடியாது. பயம் பக்கங்களை மாற்றப்போகிறது.” என்று மெக்ரான் தெரிவித்துள்ளார்.

வரலாறு ஆசிரியர் சாமுவேல் பாட்டியின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசு நாட்டில் உள்ள தீவிர இஸ்லாமியவாதிகள் மீது ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளது.

எலிசி அரண்மனையில் நடந்த அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மெக்ரான் இந்த அறிக்கையை வெளியிட்டார். இதில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் ஜீன்-பிரான்சுவா ரிக்கார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைதிக்கான ஹீரோ என்று பாராட்டப்பட்ட பாட்டிக்கு மெக்ரன் அஞ்சலி செலுத்தினார். அவர் குடியரசை ஆதரித்ததால் கொல்லப்பட்டார் எனக் கூறிய மெக்ரன், “இஸ்லாமியவாதிகள் எங்கள் எதிர்காலத்தை விரும்புவதால் அவர் கொல்லப்பட்டார். பாட்டியைப் போன்ற அமைதிக்கான ஹீரோக்கள் இருக்கும் வரை, அவர்கள் ஒருபோதும் அதைப் பெற மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.” என்றார்.

கருத்துச் சுதந்திரம் குறித்த வகுப்பின் போது முகமது நபி அவர்களின் கார்ட்டூன்களைக் காட்டியதற்காக 18 வயதான தீவிர இஸ்லாமியரால் பாட்டி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வகுப்பைத் தொடர்ந்து வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒருவரின் தந்தை பாட்டிக்கு எதிராக ஃபத்வா வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

தந்தை பிரஹிம் சினினா என அடையாளம் காணப்பட்டார். பாட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்று வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

பாட்டிக்கு மரணத்திற்குப் பின் லெஜியன் டி ஹொன்னூர் எனும் பிரான்சின் மிக உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0