ஒரு நாள் முதல்வர் பாணியில்…ஒரு நாள் பிரதமரான 16 வயது சிறுமி…பின்லாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம் ….!!!

Author: Aarthi
9 October 2020, 9:08 am
finland falg - updatenews360
Quick Share

பின்லாந்து: 16 வயது சிறுமியை ‘ஒரு நாள்’ பிரதமராக்கி அழகு பார்த்துள்ளார் பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர்.

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் என்ற 34 வயது பெண் தலைவர் பிரதமர் பதவி வகித்து வருகிறார். பின்லாந்து நாட்டில் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை சன்னா மரின் கையில் எடுத்துள்ளார்.

தனது கொள்கையை நிரூபிக்கும் விதமாக பரபரப்பான செயலை அரங்கேற்றியுள்ளார் பெண் பிரதமர். 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

16 வயது சிறுமி ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், பிரதமரான அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.

ஆவா முர்டோ

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின் கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.

Views: - 48

0

0