ஏழை மீனவரை கோடீஸ்வரன் ஆக்கிய வாந்தி! யாரு வாந்தி தெரியுமா?

22 January 2021, 2:47 pm
Quick Share

தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவரை திமிங்கலத்தின் வாந்தி கோடீஸ்வரன் ஆக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவர் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் உள்ளார்.

நடுக்கடலில் வாழ்ந்து வரும் திமிங்கலங்கள், தனக்கு ஒவ்வாத மீன்களை சாப்பிடும் போது, அவை செமிக்காமல், திமிங்கலத்தின் குடல் பகுதிகளிலேயே தங்கிவிடும். நாளாக நாளாக ஒரு பெரிய பந்து போல் அது உருமாரும். நீண்ட நாட்களுக்குப்பின், அதனை வாந்தியாக திமிங்கலம் வெளியே எடுத்துவிடும். இந்த வாந்தி, வாசனை திரவியங்கள் தயாரிக்க இன்றியமையாததாம். முதலில் கெட்ட வாடை அடிக்கும் இந்த வாந்தி, காய்ந்த பின் இனிமையான வாசனையை கொடுக்குமாம். இதனால் இதற்கு சர்வதேச சந்தையில் கற்பனைக்கு எட்ட முடியாத அளவு பணம் கொட்டும். அப்படி ஒரு திமிங்கலத்தின் வாந்தி தான் இந்த ஏழை மீனவருக்கு கிடைத்துள்ளது.

தாய்லாந்திலுள்ள சாங்லா பகுதிகயை சேர்ந்தவர் சார்ல்ஸ்ம்சைய் (வயது 20). கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கடலிலிருந்து கரைக்கு திரும்பும் போது, கடற்கரையில் ஒரு வெள்ளை கல் போன்று ஒன்று கண்ணில் பட்டது. திமிங்கலம் வாந்தி குறித்து ஏற்கனவே அறிந்திருந்த அந்த ஏழை மீனவர், ஒருவேளை இது அதுவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அதனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின் பரிசோதனையில் அது திமிங்கலத்தின் வாந்தி தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

வாந்தி கிடைத்ததால் தன்னை மிகவும் அதிரஷ்டசாலியாக உணர்வதாக அந்த இளைஞர் கூறி உள்ளார். அவருக்கு கிடைத்த வாந்தியின் எடை 7 கிலோ உள்ளது. இதன் மூலம் அவருக்கு குறைந்தது 2 கோடி ரூபாய் கிடைக்குமாம்.. கூரையை பிச்சுகிட்டு பணம் கொட்டும் என்பார்கள்.. இவருக்கு வாந்தியாக கொட்டிருக்கிறது..

Views: - 0

0

0