ஸ்கேனில் டிரம்ப் முகம்; ஷாக் ஆன கர்ப்பிணி பெண்.. எங்கு தெரியுமா?

16 January 2021, 12:35 pm
Quick Share

இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ‘அலட்ரா சவுண்ட் ஸ்கேன்’ ரிப்போர்ட்டில், டிரம்ப் முகம் தெரிவது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் அம்மாக்களுக்கு, குழந்தை பிறக்கும் முன், அதனை ஸ்கேனில் பார்த்து மகிழ்வது அலாதி சுகம். ஆனால் இந்த அம்மா ஸ்கேனை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார்.. இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பகுதியை சேர்ந்தவர் லியன்னா ஹாரிஸ். 35 வயது நிரம்பிய இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 20 வார கர்ப்பமாக இருக்கும் லியன்னா, குழந்தையின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்திருக்கிறார்.

வழக்கம் போல் கடந்த வாரமும் பரிசோதனைக்கு சென்ற அவருக்கு, ‘அல்ட்ரா சவுண்ட்’ பரிசோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. அதன் ரிசல்டை கண்ட லியன்னா, அதிர்ச்சியில் உறைந்து போனார். ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் முகம் வித்தியாசமாக தெரிய, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

குழந்தையின் தலை வித்தியாசமாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட, பலரும் தங்கள் கருத்துக்களை கூற துவங்கிவிட்டனர். ஒருகட்டத்தில், லியன்னாவுக்கு, ஸ்கேனில் தெரியும் குழந்தையின் புகைப்படம், அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்பின் முகத்துடன் ஒத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஸ்பெஷல் அம்மா தான், தற்போது இன்டர்நெட்டில் ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டனில், ஹோலி கில்ஸ் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எடுக்கப்பட்ட ‘அல்ட்ரா சவுண்ட்’ பரிசோதனையில், அவரது குழந்தை வயிற்றுக்குள் ‘தம்ஸ் அப்’ காட்டியபடி இருக்கும் புகைப்படம் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0