இடிபாடுகளில் புதைந்து உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை.. !குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய்..!

Author: Udayaraman
23 July 2021, 9:39 pm
Quick Share

சீனாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை காப்பாற்றிவிட்டு குழந்தையின் தாய் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் இதன் தலைநகரமான ஜெங்கோ மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக இருப்பதால் போக்குவரத்தும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற கட்டிட இடிபாடுகளில் தாயும் 4 மாத குழந்தையும் சிக்கி தவித்துள்ளனர். மீட்பு படையை பார்த்த தாய், எப்படியாவது குழந்தையை காப்பாற்றிவிட துணிந்துள்ளார். தாய் குழந்தையை அங்கிருந்த மீட்பு படையினரிடம் தூக்கி எறிந்துவிட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரை நீத்த தாயின் செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 185

0

0