“அம்மா பரிமாறிய சாப்பாடு“ : ஜீரணமாவதற்குள் சுவர் இடிந்து பலியான 8 வயது மகன்!!

12 November 2020, 4:42 pm
Lanka Boy Dead - Updatenews360
Quick Share

இலங்கை : கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பகுதியில் பலத்த மழை காரணமாக குறித்த பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பதிவாகியுள்ளது. தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது அவரது 8 வயது உணவருந்திக்கொண்டிருந்துள்ளான்.

அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளான். வை்தியசாலையில் சிகி்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த ம்பவத்தில் 8 வயதான நிரோயன் சாந்தன் பலியான சம்பவம் குறித்து விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் முன்னெடுத்துள்ளனர். அந்த பகுதியில் வெள்ள நீர் தேங்குவது தொடர்பான பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கரைச்சி பிரதேச சபையினால் குறித்த வடிகாணமைப்பு வசதியினை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று ஒரு சிறுவனின் உயிர் பிரிந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Views: - 39

0

0