அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா : சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட ஒபாமாவின் முன்னாள் பணியாளர்

By: Aarthi
3 October 2020, 12:30 pm
donald trumph - updatenews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் டிஜிட்டல் குழு அலுவலகத்தில் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றியவர் ஜாரா ரஹீம்.

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜாரா ரஹீம் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அந்த பதிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக இதை ட்வீட் செய்வது எனது தார்மீக அடையாளத்திற்கு எதிரானது. ஆனால் , அவர் இறந்துவிடுவார் என்று நம்புகிறேன் என பதிவிட்ட ரஹீம் உடனே அப்பதிவை நீக்கியுள்ளார்.

அந்த பதிவில் நபரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஜனாதிபதிக்கு கொரோனா உறுதியானதாக செய்தி வெளியானதை அடுத்து, அவர் பதிவிட்ட ட்விட்டர் கருத்து பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Views: - 45

0

0