பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல்..! நான்கு பாகிஸ்தானியர்களை கைது செய்தது பிரெஞ்சு போலீஸ்..!
22 December 2020, 7:51 amசார்லி ஹெப்டோ இதழின் முன்னாள் அலுவலகத்திற்கு வெளியே அண்மையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த நபர்களை பிரெஞ்சு பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் 25’ம் தேதி சார்லி ஹெப்டோ வார இதழின் முன்னாள் அலுவலகத்திற்கு வெளியே இரண்டு பேர் காயமடைய காரணமான தாக்குதல் தொடர்பான வழக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நான்கு இளைஞர்களும் 17-21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், முக்கிய தாக்குதல் நடத்திய ஜாகீர் ஹசன் முகமதுவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்றும் நம்பப்படுகிறது.
செப்டம்பர் 25 அன்று, 12 கார்ட்டூனிஸ்டுகள் மற்றும் ஊழியர்களைக் கொன்ற 2015 சார்லி ஹெப்டோ தாக்குதலின் நினைவு நாளில், ஹசன் பத்திரிகையின் முன்னாள் அலுவலக வளாகத்திற்கு வெளியே ஒரு இறைச்சி வெட்டும் கத்தியால் இரண்டு பேரை கடுமையாக காயப்படுத்தினார்.
பயங்கரவாத குற்றச்சாட்டில் ஹசன் உடனடியாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கார்ட்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கான சார்லி ஹெப்டோ பத்திரிகையின் முடிவைப் பற்றி பகிஸ்தானில் இருந்து வீடியோக்களை பார்த்ததாக அவர் விசாரணையாளர்களிடம் கூறினார்.
தாக்குதலுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், அழுத ஹசன், கேலிச்சித்திரங்களை கண்டித்து தெஹ்ரீக்-இ லாபிக் கட்சியின் தீவிரவாத தலைவர் காதிம் உசேன் ரிஸ்வியின் உரைகளால் தான் உந்துதல் பெற்றதாகக் கூறினார். ஹசன் 2018 முதல் பிரான்சில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0
0