கொரோனாவின் இரண்டாவது அலை..! மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மீது மீண்டும் ஊரடங்கை விதித்த பிரான்ஸ்..!

24 October 2020, 4:40 pm
macron_emmanuel_updatenews360
Quick Share

பிரான்ஸ் கடந்த வியாழக்கிழமை கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு உத்தரவை ஒன்பது நகரங்களில் அமல்படுத்திய ஒரு நாள் கழித்து, ஊரடங்கு உத்தரவை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் தற்போது பிரான்சில் சுமார் 46 மில்லியன் மக்கள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் எதிர்கொண்டுள்ளனர்.

பாரிஸ் மற்றும் பிற எட்டு பிரெஞ்சு நகரங்கள் கடந்த வார இறுதியில் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டன. அங்கு தினசரி புதிய நோய்த்தொற்றுகள் கணிசமாக உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு இந்த கட்டுப்பாடுகள் மற்ற 38 செக்டர்களுக்கும் பிரெஞ்சு பாலினீசியாவிற்கும் ஆறு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார். இதன் மூலம் பிரெஞ்சு மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர் என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்தார்.

“எங்கள் நாட்டின் சுகாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வரவிருக்கும் வாரங்கள் கடினமாக இருக்கும். மேலும் எங்கள் மருத்துவமனைகள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என காஸ்டெக்ஸ் மேலும் கூறினார். 

30,000’க்கும் மேற்பட்டோர் இறந்த வசந்த காலத்தில் முதல் அலைக்குப் பிறகு, பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பிரான்சும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது.

1,00,000 மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 40 சதவீதம் அதிகரித்து 1,00,000’க்கு 251’ஆக அதிகரித்துள்ளது என்று காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மிக அதிக பாதிப்பிற்குள்ளான ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 20

0

0