அமெரிக்காவுக்கு சுதந்திர தேவியின் சிலையை பரிசாக அனுப்பும் பிரபல ஐரோப்பிய நாடு!

8 June 2021, 10:31 pm
Quick Share

வரும் ஜூலை 4-ஆம் திகதி சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள அமெரிக்காவுக்கு, நட்பு நாடான பிரான்ஸ் அரசு சுதந்திர தேவியின் சிலையை பரிசாக அனுப்பவுள்ளது.கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரம் கொண்ட இந்த வெண்கல சிலை, பிரெஞ்சு துறைமுகமான லு ஹவ்ரேவிலிருந்து கப்பல் மூலமாக இந்த மாத இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு, அமெரிக்க மாகாணம் மேரிலாண்டில் உள்ள பால்டிமோர் நகரத்துக்கு சென்றடையவுள்ளது.

இது ஜூலை 4-ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான எல்லிஸ் தீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. மினி-லேடி லிபர்ட்டி என அழைக்கப்படும் இந்த சிலை, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.பின்னர், ஜூலை 14-ஆம் திகதி, பிரான்சின் பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ளது. பிறகு அந்த சிலை அடுத்த தசாப்தம் வரை அங்கேயே இடம்பெறவுள்ளது.

அகஸ்டே பார்தோல்டி வடிவமைத்து நியூயார்க் துறைமுகத்தில் உள்ள நினைவுச் சின்னமான லிபர்ட்டி சிலை, அடைக்கலம் மற்றும் சுதந்திரத்தை நாடுகின்ற புலம்பெயர்ந்தோரை அமெரிக்கா வரவேற்பதை குறிக்கிறது. ஆனால், பிரான்ஸ் அனுப்பும் இந்த பரிசால், இப்போது இந்த சிலை பிரெஞ்சு-அமெரிக்க நட்பின் நினைவுச் சின்னமாகவும் செயல்படவுள்ளது.

Views: - 149

0

0