போராட்டக்காரர்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: பிரான்ஸ் அரசு கடும் கண்டனம்…!!

21 February 2021, 8:15 am
myanmar - updatenews360
Quick Share

பாரிஸ்: போராட்டக்காரர்கள் மீது மீயான்மர் பாதுகாப்பு படை நடத்தும் தாக்குதல்களுக்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது. அதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

myanmar military - updatenews360

ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை இடைவிடாமல் எதிர்த்து, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கலைப்பதற்காக மியான்மர் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மேலும் ஒரு நபர் ராணுவத்தின் தாக்குதலால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மியான்மரில் நடைபெறும் ராணுவ அடக்குமுறைக்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் வெளியுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது வன்முறை ஏவப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவிக்கப்பட்டுளது.

The scvo3 may be associated with 17, operative hysteroscopies. viagra pill Us baresthesia.

Views: - 38

0

0