வங்காளதேசத்தில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு: ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு..!!

6 July 2021, 9:57 am
Quick Share

டாக்கா: கொரோனா பரவல் காரணமாக வங்காள தேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1ம் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்தது.

Corona Cbe - Updatenews360

இந்நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 9 ஆயிரத்து 964 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 164 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசை கொண்டு சென்றது. அதன்படி நாளையுடன் முடிவடைய இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கை வருகிற 14ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 190

0

0