பயந்தாங்கொள்ளி பாகிஸ்தான் ராணுவத் தளபதி..! அபிநந்தன் விடுவிப்பிற்குக் காரணம் இது தான்..! வைரலாகும் வீடியோ..!

29 October 2020, 11:01 am
abhinandan_updatenews360
Quick Share

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) தலைவர் அயாஸ் சாதிக், ஆளும் இம்ரான் கான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததோடு, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) பைலட் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்தபோது நாட்டில் நிகழ்ந்த சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாதிக் கூறுகையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, ஐ.ஏ.எஃப் விமானி விரைவில் விடுவிக்கப்படாவிட்டால் இந்தியா பாகிஸ்தானைத் தாக்குவது குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் கான், இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார் என்றும் சாதிக் கூறினார்.

“ஷா முகமது குரேஷி கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இம்ரான் கான் இதில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். இராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா அறைக்குள் வந்தார். அப்போது அவரது கால்கள் நடுங்கின. மேலும் அவர் வேர்த்து விறுவிறுக்க பதற்றத்துடன் இருந்தார்.

அப்போது பேசிய வெளியுறவு அமைச்சர், கடவுளின் பொருட்டு அபிநந்தனை செல்ல விடுங்கள் என்றும் அவர் விடுவிக்கப்படாவிட்டால் இந்தியா இரவு 9 மணியளவில் பாகிஸ்தானைத் தாக்க தயாராக உள்ளது என்றும் கூறினார்.” என்று பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அயாஸ் சாதிக் கூறினார்.

பிப்ரவரி 27, 2019 அன்று, விங் கமாண்டர் அபிநந்தன் ஒரு சண்டையின் போது பாகிஸ்தான் எஃப் -16 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இருப்பினும், அவரது மிக் -21 விமானமும் சுடப்பட்டது.  இதனால் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாராசூட் மூலம் தரையிறங்கினார். அங்கிருந்து அவர் பாகிஸ்தான் படைகளால் கைப்பற்றப்பட்டார். பின்னர் ஐ.ஏ.எஃப் பைலட் மார்ச் 1 அன்று அட்டாரி-வாகா எல்லையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் வீடியோ வைரல் ஆனவுடன், பாரதீய ஜனதா கட்சி (பாஜக) பாலகோட் வான்வழித் தாக்குதல் தொடர்பாக கேள்விகளை எழுப்பியதற்காக காங்கிரசுக்கும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் அயாஸ் சாதிக் வீடியோ கிளிப்பை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார். அதில், “ராகுல்ஜி, நீங்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் விமானத் தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தீர்களே? பாகிஸ்தானில் மோடிஜிக்கு அவர்கள் எப்படி அஞ்சுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.” எனக் கூறியுள்ளார்.

Views: - 29

0

0

1 thought on “பயந்தாங்கொள்ளி பாகிஸ்தான் ராணுவத் தளபதி..! அபிநந்தன் விடுவிப்பிற்குக் காரணம் இது தான்..! வைரலாகும் வீடியோ..!

Comments are closed.