முதல் டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா…. 2வது டோஸ் மாடர்னா: இருவேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட ஜெர்மன் சான்சலர்…!!

23 June 2021, 4:03 pm
Quick Share

பெர்லின்: ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கலா முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், 2வது டோஸ் தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது.

astrazeneca_vaccine_updatenews360

இதனால் முதல் டோஸாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அடுத்த டோஸாக வேறு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஜெர்மன் அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், 66 வயதான ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டோஸாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், தற்போது 2வது டோஸாக மாடர்னா தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 190

0

0