நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: உலக அளவில் 11.43 கோடி பேர் பாதிப்பு..!!

28 February 2021, 9:03 am
Corona_America_UpdateNews360
Quick Share

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.43 கோடியை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.43யை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,43,64,387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,99,18,441 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 679 பேர் உயிரிழந்துள்ளனர்.

Views: - 8

0

0