தினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 9:47 am
google HBD - Updatenews360
Quick Share

பயனாட்டளர்களின் தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது.

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள், தனது 23-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் கூகுள். தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் நிறுவன‌ம் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பியுள்ள நிலையில், இதன் மொத்த தொழில்களும் ஆல்ஃபாபெட் என்ற குடையின் கீழ் வந்துள்ளது.

கூகுளின் பிறந்த நாளையொட்டி சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வே‌லைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

Views: - 338

0

0