அதிர்ந்த அமெரிக்கா…! பிரஸ் மீட்டில் துப்பாக்கிச்சூடு…! தப்பிய டிரம்ப்
11 August 2020, 10:19 amவாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் பேட்டி அளித்து கொண்டிருந்த போது திடீர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி திரிந்துள்ளார். அவரின் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
அதை கண்ட அவர் அங்கிருந்த தப்பிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட பரபரப்பு எழுந்தது. அப்போது உள்ளே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்த அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு காரணம் கருதி உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் யார்? எதற்காக வந்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. டிரம்ப் மீது குறி வைக்க அவர் வந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்த விசாரணையில் பாதுகாப்பு படையினர் இறங்கி உள்ளனர்.