ஹைதி நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Author: kavin kumar
23 August 2021, 9:12 pm
Quick Share

ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த கடந்த 14-ம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால், மக்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.இந்த நிலநடுக்கத்தில் 53 ஆயிரத்திற்கும் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நிலநடுக்கத்தால் 12,268 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஹைதி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 344 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளனது. இதனால், பலி எண் ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Views: - 351

0

0