கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்க ‘கடவுளின் கை’! வைரலாகும் பதிவு

17 April 2021, 9:33 am
Quick Share

பிரேசிலில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், கிளவ்ஸில் சுடு தண்ணீரை நிரப்பி, கைகளில் நர்ஸ் ஒருவர் கட்டி விடுகிறார். ‘கடவுளின் கை’ என்ற இந்த பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது அதி வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், இறப்பும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, ஆறுதல் அளிக்கும் வகையில், ‘கடவுளின் கை’ முயற்சியை நர்ஸ் ஒருவர் செய்து வருகிறார். அவரது இந்த யோசனை, உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.

பிரேசிலில் நர்ஸாக பணியாற்றுபவர் செமி அராஜோ குன்ஹா. இவர் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் கூறும் விதமாக, இரு கையுறைகளில் வெதுவெதுப்பான சுடு தண்ணீர் நிரப்பி, அதனை நோயாளிகளின் கைகளை பற்றியிருப்பது போல கட்டி விடுகிறார். தனிமையில் இருக்கும் அவர்களுக்க இது ஆறுதலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை ‘கடவுளின் கை’ என அழைக்கும் அவர், அதன் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். நெட்டிசன்களின் மனதை இளக்க, இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

Views: - 22

0

0