கடந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றால் 3.2 லட்சம் குழந்தைகள் பலி….!!

26 November 2020, 2:58 pm
unicef
Quick Share

நியூயார்க்: எச்.ஐ.வி. தொற்றுக்கு கடந்த ஆண்டில் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. சர்வதேச குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு வெளியிட்டு உள்ள தனது புதிய அறிக்கை ஒன்றில், கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கு ஒரு முறை, குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்படி எச்.ஐ.வி. தொற்றுக்கு கடந்த ஆண்டில் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

எய்ட்ஸ் வியாதிக்கு 1.1 லட்சம் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில், தடுப்பு முயற்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை மிக குறைவாக இருந்துள்ளன. உலகம் முழுவதுமுள்ள 50 சதவீதத்திற்கு சற்றேறக்குறையவுள்ள குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகளும் கிடைக்கப்பெறவில்லை.

இதுபற்றி யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறும்பொழுது, குழந்தைகள் இன்னும் எச்சரிக்கைக்குரிய விகிதங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் எய்ட்ஸ் வியாதியால் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா தொற்றால், எச்.ஐ.வி.க்கு அளிக்கும் முக்கிய சிகிச்சை முறை மற்றும் தடுப்பு முறைகள் தடைப்பட்டு எண்ணற்ற பேருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

Views: - 0

0

0