‘ஹாலிபூப்’ ஆனா ஹாலிவுட்! எதற்கு தெரியுமா?

3 February 2021, 9:02 am
Quick Share

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் ஒரு பகுதி தான் ஹாலிவுட். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல ஸ்டுடியோக்கள் அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை அப்பகுதி ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது. அமெரிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக அறியப்படும் ‘ஹாலிவுட்’ என எழுதப்பட்ட இடம் உலகளவில் பிரபலம்.

இந்நிலையில், ஹாலிவுட் என எழுதப்பட்ட அந்த ஐகானில், ஹாலிபூப் என மாற்றப்பட்டது. அதாவது ‘டபிள்யூ’வுக்கு பதில், ‘பி’யும், கடைசி எழுத்தான ‘டி’க்கு பதிலாக ‘பி’எனவும் மாற்றப்பட்டது. இதனை கண்ட பலர் திகைத்து விட்டனர். இதுகுறித்து உடனடியாக தகவல் பரவ, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

அங்கு 5 ஆண்கள், ஒரு பெண் இணைந்து டபிள்யூ என்ற எழுத்தில், பி எழுத்தை கொண்டு துணி போல் போர்த்தியும், கடைசி எழுத்தன ‘டி’க்கு இடையில் ஒரு கோடு போன்று வைத்து அதனை பி ஆக மாற்றியதும் தெரியவந்தது. ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கிருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களின் விசாரணை நடத்திய போது, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தனர். ஹாலிவுட் ஐகானுக்கு எந்த சேதமும் ஏற்படாததால், அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால் டுவிட்டரில் இந்த புகைப்படம் வைரலாக பரவ துவங்கியது. பலரும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடந்து கொண்ட அந்த குழுவின் செயலை வரவேற்று கருத்துகளை பதிவிட அது வேகமாக பரவி வருகிறது.

Views: - 23

0

0