லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடி விபத்து..! விண்ணை முட்டிய புகை..! அதிர்ந்த நகரம்..! (வீடியோ)
4 August 2020, 10:01 pmஇன்று மாலை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இது வீடுகளை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஹிரோஷிமா அணுகுண்டு புகை போன்ற புகை மேகத்திற்கு வழிவகுத்ததால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
முதல் வெடிப்பு துறைமுகத்தில் ஏற்பட்டது. இரண்டாவது வெடிப்பு நகரத்திற்கு அருகில் இருந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, இரண்டு வெடிப்புகள் 15 நிமிட இடைவெளிகளுக்குள் நிகழ்ந்தன. இது நகர மையத்தில் உள்ள முன்னாள் பிரதமர் சாத் ஹரிரியின் இல்லத்திற்கு அருகில் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இரண்டாவது வெடிப்பு மிகவும் சத்தமாக இருந்தது மற்றும் முழு நகரத்தையும் வீடுகளையும் உலுக்கியது. இந்த வாரம் முன்னாள் பிரதமர் ரபிக் ஹரிரி 2005’இல் கொல்லப்பட்டதற்கான வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ரூட்டில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வட்டாரங்களின்படி, தீப்பிழம்புகள் பட்டாசு குடோனில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கட்டத்தில் வெடிப்பின் காரணத்தைக் கண்டறிவது கடினம் என்றாலும், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்கள் முழுவதும் உள்ள வீடியோக்கள், வெடிப்பிற்கு பட்டாசு குடோன் மட்டுமே காரணமாக இருக்காது என தெரிவித்துள்ளன.
லெபனான் தற்போது ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பெய்ரூட் இந்த அளவிலான வெடிப்பைக் காணவில்லை என்று பல தகவல்கள் கூறுகின்றன.