பாகிஸ்தானில் கிறிஸ்துவ சிறுமி கடத்திக்கொலை..! மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

12 January 2021, 9:27 pm
Murder_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடத்தி கொல்லப்பட்ட கிறிஸ்தவ பெண் குழந்தை இஷால் அப்சலுக்கு நீதி வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.

பைசலாபாத்தின் லியாகத் டவுனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் இஷால் கடத்தப்பட்டதாக எச்.ஆர்.எஃப்.பி எனும் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஷாலின் தந்தை அப்சல் மாசிஹ், அவர்களது சர்ச் பாஸ்டர் சோஹைல் மாசிஹ் உடன், எச்.ஆர்.எஃப்.பி அலுவலகத்திற்குச் சென்று விவரங்களை சட்டக் குழுவுடன் பகிர்ந்து கொண்டு, தனது மகளை கொடூரமாக கொலை செய்ததை எதிர்த்து பைசலாபாத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தை நாடினார்.

“எச்.ஆர்.எஃப்.பியின் உண்மை கண்டுபிடிப்புகள் குழு சம்பவ இடத்தை பார்வையிட்டது. இஷால் அப்சல் ஜனவரி 06 அன்று காலை 8.30 மணியளவில் அவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார் என்பது தெரிய வந்துள்ளது.” என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசலாபாத்தின் ஜரன்வாலா சாலையில் உள்ள சதார் காவல் நிலையத்திலும் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மறுநாள் அப்பகுதியின் குளம் அருகே இஷாலின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

“பாலியல் பலாத்கார முயற்சிகளுக்குப் பிறகு ஐந்து மணி நேரத்திற்கு முன்னர் அவர் செய்யப்பட்டார் என்று ஆரம்ப மருத்துவ அறிக்கைகள் காட்டுகின்றன. போலீசார் 2 சந்தேக நபர்களை விசாரித்தனர். ஆனால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.” என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவீத் வால்டர், கிறிஸ்தவ, இந்து மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவது, பாகிஸ்தானில் தொடர்கதையாக உள்ளது என்று கூறினார்.

“சிறுமிகள் கடத்தப்பட்டதற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 வழக்குகளை எட்டியுள்ளன” என்று வால்டர் கூறினார்.

சிறார்களைக் கவனித்து, அந்நியர்களை அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் எளிதில் அணுகுவதை நிறுத்துமாறு அவர் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை கடத்தி, கற்பழிப்பு மற்றும் கொலை செய்வதை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று நவீத் வால்டர் மேலும் தெரிவித்தார்.

Views: - 3

0

0