இம்ரான் கான் ஆள்வதை ஏற்க முடியாது..! பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு மிகப்பெரும் போராட்டத்திற்குத் தயார்..!

8 February 2021, 9:21 pm
rehman_pdm_pakistan_updatenews360
Quick Share

அடுத்த மாதம் நடத்த உள்ள உத்தேச நீண்ட அணிவகுப்பில் எதிர்க்கட்சிகள் நாட்டில் புதிய தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) தலைவர் மௌலானா ஃபஸ்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் அரசாங்கம் நாட்டை ஆள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரெஹ்மான் கூறினார்.

மார்ச் 26 அன்று இம்ரான் கானின் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நீண்ட அணிவகுப்பை பி.டி.எம் அறிவித்துள்ளது. மார்ச் 26 அன்று நாடு முழுவதும் இருந்து இஸ்லாமாபாத்துக்கு நீண்ட அணிவகுப்பு புறப்படும் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் ஊடகமான ஜியோ நியூஸுடனான ஒரு உரையாடலின் போது, அணிவகுப்பு நாங்கள் வெறுமனே வந்து செல்கிறோம் என்பது போல் இருக்காது என்று கூறினார். “நாங்கள் அங்கேயே தங்கி போராடுவோம். இம்ரான் கான் பொது அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்.” என்று ரெஹ்மான் கூறினார்.

யாருடனும் இரகசியப் பேச்சுக்களை நடத்துவதாகக் கூறப்படும் தகவல்களையும் அவர் மறுத்தார். மேலும் மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் போர் நடத்தப்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.

“தேர்தல் மோசடிக்கு எதிராக வேறு எந்த மன்றத்தையும் நாங்கள் அணுக வேண்டியதில்லை” என்று பிடிஎம் தலைவர் மேலும் கூறினார்.

தனக்கு எதிரான தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் மேற்கொண்ட விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த ரெஹ்மான், “என்ஏபி உட்பட யாரும் என்னை எதற்கும் பொறுப்புக் கூற முடியாது” என்றார்.

Views: - 0

0

0