உய்குர் முஸ்லீம்கள் மீதான இன அழிப்பில் மௌனம்..! சிதைந்து போன இம்ரான் கானின் “முஸ்லீம் பாதுகாவலர் பிம்பம்..!

31 January 2021, 7:23 pm
Imran_khan_UpdateNews360
Quick Share

உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களின் பாதுகாவலராக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவால் உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்து மௌனம் காப்பதால் அவரின் நிலைப்பாடு கேள்விக்குள்ளாவதாக வில்சன் மையத்தில் தெற்காசியாவிற்கான திட்டத்தின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன் தெரிவித்தார்.

வெளியுறவுக் கொள்கையில் ஒரு கருத்துத் தொகுப்பில், குகல்மேன் இந்த விவகாரத்தில் இம்ரான் கான் மௌனமாக இருப்பதற்கான காரணத்தை மேற்கோள் காட்டி, பாகிஸ்தான் பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவிற்காக சீனாவைப் பெரிதும் சார்ந்துள்ளது என்று கூறினார். சீனாவையும் பகைத்துக் கொண்டால் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என அவர் மேலும் கூறினார்.

உய்குர் பிரச்சினை பற்றி பகிரங்கமாகக் கேட்டபோது, இம்ரான் கானின் பதில்கள் அவருக்கு விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது என்பதிலிருந்து சீனாவுடன் தனிப்பட்ட முறையில் விவாதிப்பதாகக் கூறுவது வரை மட்டுமே இருக்கும்.

குகல்மேனின் கூற்றுப்படி, இம்ரான் கானின் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவரான மொயீத் யூசுப், உய்குர் விவகாரம் ஒரு பிரச்சினையே அல்ல என்றும் அரசாங்கம் 100 சதவீதம் திருப்தி அடைந்துள்ளது என்று கூறும் அளவிற்கு சென்றது.

மேலும், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சிலர் இந்த விஷயம் சீனாவிற்கு மிக முக்கியமானதாக உள்ளதால் அவர் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர். எனினும், மியான்மரில் அல்லது மிக சமீபத்தில் பிரான்சில் உள்ள முஸ்லீம்களின் நிலை குறித்து பேசுவதிலிருந்து இது அவரைத் தடுக்கவில்லை என்று குகல்மேன் கூறினார்.

“ஆனால், சீனாவின் உய்குர் சமூகத்தின் அடக்குமுறை குறித்த மௌனத்தால் உலக முஸ்லீம்களை வென்றெடுப்பதில் இம்ரான் கானின் பணி குறைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தின் உறுப்பினர்களை ஒருவித வலுக்கட்டாயமாக மறு கல்வி அல்லது போதனைக்கு உட்படுத்தியதன் மூலமாகவும் சீனா உலகளவில் கண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 31

0

0