நீங்க வராட்டி நாங்க போவோம்ல! மச்சு பிச்சுவில் அபூர்வ கரடிகள்

18 January 2021, 3:49 pm
Quick Share

பெரு நாட்டிலுள் மச்சு பிச்சுவில், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அபூர்வ ‘பேடிங்டன்’ என்ற ஆண்டியன் கரடிகள் கோட்டையின் இடிபாடுகளுக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெரு நாட்டிலுள்ள மச்சு பிச்சுவை கடந்த 1983 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அங்கு தற்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அழிந்து வரும் கரடி இனமான, ஆண்டியன் பெண் கரடி ஒன்று அதன் குட்டியுடன் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மச்சு பிச்சுவின் இன்கா கோட்டை இடிபாடுகளுக்கு இடையே இவை காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில், ஆண்டியன் கரடி இனத்தில் எஞ்சி இருக்கும் ஒரே கரடியாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாலூட்டி வகையை சேர்ந்த இந்த கரடிகள், 1.9 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. 80 முதல் 125 கிலோ எடை வரை இருக்கும். இந்த கரடி இனத்தை, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், அழிந்து வரும் உயிரினங்களில் சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது. கருப்பு நிறம், கொண்ட இந்த கரடிகள், முகத்தில் மட்டும் வெள்ளை திட்டுக்களை கொண்டிருக்குமாம். விலங்குகளின் வாழ்விடங்களில், மனிதர்கள் தலையீடு இருக்காத வரை, அவை நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழும் என்பது நாம் சொல்லி தான் தெரிய வேண்டுமா!

Views: - 5

0

0