பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவால் 261 பேர் பலி: புதிதாக 25,403 பேருக்கு தொற்று உறுதி..!!

26 February 2021, 8:59 am
france corona - updatenews360
Quick Share

பாரிஸ்: பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,403 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது. இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 25,403 ஆக பதிவாகி உள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,86,813 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அங்கு மேலும் 261 பேர் உயிரிழந்துள்ளதால், பலியானோர் மொத்த எண்ணிக்கை 85,582 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,54,868 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 33,46,363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 3

0

0