ரஷியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?….

11 November 2020, 10:32 am
Corona_Vaccine_Russia_UpdateNews360
Quick Share

மாஸ்கோ: ரஷியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்று. அங்கு கடந்த சில நாட்களாக வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 17 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

Cbe Corona - Updatenews360

அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஆனால், இன்னும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள இரண்டாவது கரோனா தடுப்பு மருந்துக்கு அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0