பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 8,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

27 February 2021, 8:55 am
france corona - updatenews360
Quick Share

லண்டன்: பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனை உலுக்கி எடுத்து வரும் உருமாறிய கொரோனா பாதிப்பு , இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தொற்று பாதிப்பும் கணிசமாக பரவி வருகிறது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 345 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,22,415 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் இதுவரை 19.1 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது கொரோனா அச்சம் காரணமாக 3வது கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

Views: - 8

0

0