கேட்டதும் கொடுத்தவரே…போப் அணிந்த தொப்பிதான் வேணும் என அடம்பிடித்த மாற்றுத்திறனாளி சிறுவன்!!

Author: Aarthi Sivakumar
21 October 2021, 6:03 pm
Quick Share

போப் பிரான்சிஸின் தொப்பியை கேட்டு அடம்பிடித்த சிறுவனுக்கு அதேபோல வேறொரு தொப்பியை பரிசாக அளித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸின் சொற்பொழிவை கேட்க வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், அவர் அணிந்திருப்பதை போன்ற வெள்ளைத் தொப்பியை கேட்டு அடம்பிடித்துள்ளான்.

பாதுகாவலர்களை தாண்டி மேடையில் அமர்ந்திருந்த போப் பிரான்சிஸிடம் சென்று கை குலுக்கிய அந்த சிறுவன், அவர்அணிந்திருந்த தொப்பியை கேட்டு அடம்பிடித்து அவர் முன்னாள் நின்று குதிக்க தொடங்கியுள்ளான்.

மேடையை விட்டு இறங்க மறுத்த சிறுவனுக்கு போப் அருகிலேயே இருக்கை போட்டு அமரவைக்கப்பட்டான். போப் அருகே அமர்ந்த பின்னும் அந்த வெள்ளைத் தொப்பியை தனக்கு தருமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளான்.

courtesy

இதனையடுத்து, அதே போன்று வேறொரு தொப்பியை வரவழைத்து அவனுக்கு அளித்த போப்பாண்டவர் ‘கேளுங்கள் தரப்படும்’ என்ற இறைவார்த்தையை மெய்ப்பித்துள்ளார்.

Views: - 634

0

0