“கமலா ஹாரிஸ் ஒரு அரக்கி”..! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்..!

Author: Sekar
9 October 2020, 3:47 pm
Donald_Trump_Ohio_debate_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று, முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸை அரக்கி என்று கூறி புதிய சர்ச்சைக்கு விதை போட்டுள்ளார்.

நவம்பர் 3’ம் தேதி வெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்கு நடக்கும் போட்டியில் மிகவும் பின்தங்கியிருந்த டிரம்ப், குறிப்பாக பெண் வாக்காளர்களிடம்  மோசமான எதிர்ப்பை சம்பாதிக்கும் வகையில், கமலா ஹாரிஸை “இந்த அரக்கி” என இரண்டு முறை இந்த வ்வார்த்தையை பயன்படுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பின்னர் தனது முதல் நேர்காணலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸுடன் பேசிய டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்டாவில் புதன்கிழமை தன்னுடைய விவாதத்தில் ஹாரிஸை வீழ்த்தியதாக தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் சொல்வது எல்லாம் பொய் என்று டிரம்ப் அந்த பேட்டியில் மேலும் கூறினார்.

முன்னதாக வெள்ளை மாளிகைக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபரான கமலா ஹாரிஸ், தனது விவாதத்தின் பெரும்பகுதியை ட்ரம்பைத் தாக்கி, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி கொரோனாவை நிர்வகித்த விதம் தான் எனக் கூறினார்.

ஃபாக்ஸ் நேர்காணலில், டிரம்ப் மீண்டும் ஒரு முறை கமலா ஹாரிஸை மன நலம் இல்லாதவர் என முத்திரை குத்தினார். அவர் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குறிப்பிடத்தக்க கருத்துக் கணிப்பிலும் மன நலம் கொண்டவர் அல்ல என்று முன்னிலை வகிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Views: - 54

0

0