பூனைக்குட்டி ஆர்டர் செய்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி… புலிக்குட்டி கிடைத்த சம்பவம்…!!

Author: Aarthi
12 October 2020, 4:30 pm
cat - updatenews360
Quick Share

பிரான்சில் பூனைக்குட்டி ஆர்டர் செய்த தம்பதி புலிக்குட்டி கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் லே ஹாவ்ரே பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான ‘சவானா’ வகை பூனைக்குட்டியை வாங்க ஆசைப்பட்டு, 6,000 யூரோக்களை அதற்காக செலுத்தி ஆன்லைனில் பூனை ஆர்டர் செய்துள்ளனர்.

இதனையடுத்து ஆர்டர் செய்த சவானா பூனை அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அந்த பூனையை அன்பாக வளர்த்து, அதனுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டனர் அந்த தம்பதி.

tiger cat - updatenews360

நாளடைவில் பூனையின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், சந்தேகமடைந்த தம்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த விலங்கியல் நிபுணர்கள் சோதனையிட்டதில், ஆர்டர் செய்த பூனைக்குட்டிக்கு பதில் வந்தது சுமித்ரன் வகை புலிக்குட்டி என தெரியவந்தது.

இதனைதொடர்ந்து, அந்த புலிக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டு உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Views: - 55

0

0