இம்ரான் கான் இலங்கை செல்ல இந்தியாவிடம் அனுமதி கோரிய பாகிஸ்தான் அரசு..! எதற்காக தெரியுமா..?
23 February 2021, 11:28 amபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம் இலங்கைக்குச் செல்லும்போது, இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இலங்கைக்கு இம்ரான் கானின் முதல் பயணமாக இருக்கும். அவரது விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.
முன்னதாக 2019’ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமானங்களுக்கு தனது வான்வெளியை திறக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பில் வி.வி.ஐ.பி விமானத்திற்கு அனுமதி மறுத்த விவகாரத்தை இந்தியா எழுப்பியது.
சாதாரண சூழ்நிலைகளில், வி.வி.ஐ.பி விமானங்களுக்கு நாடுகளால் அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், வி.வி.ஐ.பி விமானங்களுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்தது ஒரு தவறான செயலாகும்.
இதற்கிடையே இம்ரான் காரனின் இலங்கை பயணத்தில் பாராளுமன்ற உரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இலங்கை அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில், ஏற்கனவே சீன விவகாரத்தில் இந்தியாவின் அதிருப்தியை சம்பாத்தித்துக் கொண்டுள்ள இலங்கை அரசு, இம்ரான் கான் நாடாளுமன்ற உரையை ரத்து செய்வதன் மூலம், இந்தியாவுடனான மோதல் அதிகரிப்பதைத் தவிர்க்க விரும்புகிறது எனும் ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் அந்த கட்டுரைகளில், இந்தியா மனிதாபிமான முறையில் கொரோனா தடுப்பூசி வழங்கி வருவதையும் பாராட்டியுள்ளது. இந்தியா சமீபத்தில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0