ஐநாவில் சீனாவை வீழ்த்திய இந்தியா..! பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முக்கியக் குழுவின் உறுப்பினராகி சாதனை..!

15 September 2020, 10:18 am
UN_ECOSOC_Chamber_Updatenews360
Quick Share

இந்தியா இப்போது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (எக்கோசோக்) உறுப்பினராகிவிட்டது. இந்த செய்தியை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை திருமூர்த்தி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், மதிப்புமிக்க எக்கோசோக் அமைப்பில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றும், இது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது மற்றும் எல்லா முயற்சிகளிலும் எங்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறினார்.

“மதிப்புமிக்க ஈகோசோக் அமைப்பில் இந்தியா வெற்றி பெறுகிறது! இந்தியா பெண்கள் நிலைமை ஆணையத்தின் (சி.எஸ்.டபிள்யூ) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இது எங்கள் அனைத்து முயற்சிகளிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் உறுதியான ஒப்புதல் ஆகும். உறுப்பு நாடுகளின் ஆதரவுக்கு நன்றி.” என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் சி.எஸ்.டபிள்யூ உறுப்பினராக 2021 முதல் 2025 வரை நான்கு ஆண்டுகள் உறுப்பினராக இருக்கும்.

முன்னதாக, இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை சிஎஸ்டபிள்யூ தொடர்பான ஆணையத்தின் தேர்தலில் போட்டியிட்டன. 54 உறுப்பினர்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் வாக்குப்பதிவை வென்றிருந்தன. இருப்பினும், சீனா பாதி வாக்கைக் கூட பெறத் தவறிவிட்டது.

முன்னதாக, ஜூன் 18, 2020 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு நிரந்தரமற்ற உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. 192’ல் 184 வாக்குகளில் பெரும்பான்மையுடன் இந்திய மகத்தான வெற்றி பெற்றது. இதன் மூலம் எட்டாவது முறையாக இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெண்களின் நிலை குறித்த ஆணையம் (சிஎஸ்டபிள்யூ) ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (எக்கோசோக்) செயல்பாட்டு ஆணையமாகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும். சி.எஸ்.டபிள்யூ பாலின சமத்துவத்தையும் பெண்களின் அதிகாரமளிப்பையும் ஊக்குவிக்கும் ஐநாவின் ஒரு பிரிவாகும்.

Views: - 12

0

0