இந்தியாவுக்கு எதிரான வெற்றி… இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி : கிரிக்கெட்டிற்கு மதச்சாயம் பூசும் பாக்., அமைச்சர்… குவியும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 6:02 pm
pakistan cricket - updatenews360
Quick Share

இஸ்லமாபாத் : இந்தியாவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.

இதுவரையிலான உலகக்கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளன. அதில், அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், முதல்முறையாக ஐசிசி தொடரில் இந்தியாவை தோற்கடித்திருப்பதை பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்தின் வெற்றி என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், ” இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றி. இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள், டி20 போட்டி நடந்து கொண்டிருந்த போது, பாகிஸ்தான் வெற்றி பெற ஆதரவு தெரிவித்து வந்தனர். பாகிஸ்தானுக்கு, நேற்று நடந்த இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியே இறுதிபோட்டி,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல், அதில் மதத்தை புகுத்த நினைக்கும் பாகிஸ்தான் அமைச்சரின் இந்த சர்ச்சை கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதேவேளையில், ஆதரவாகவும் கருத்துக்களை பாகிஸ்தான் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 1289

0

0