யாருக்கு வரும் இந்த தாராள மனது! 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்த அமெரிக்க – இந்திய தம்பதி!

1 April 2021, 9:00 am
Quick Share

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர், இந்தியாவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அமைப்பிற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

பீஹார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, முன்னாள் மாணவர்களை இணைத்து ஒரு பிரான் – பஜானா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டாக்டர்கள் இந்த அமைப்தட உருவாக்கினர். ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், இவர்கள் ஒரு இலவச மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், ஜார்கண்ட் முழுவதும் இலவச மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த அமைப்பிற்கு நிதி திரட்டும் பணியும் நடந்து வருகிறது. இதனை பீஹார் – ஜார்க்கண்ட் கூட்டமைப்பு மேற்கொள்கிறது. உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாட்டில் வசிப்பவர்களும் அந்த அமைப்புக்கு நிதி அளித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் நன்கொடை அளிக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரமேஷ் என்பருவம், அவரது மனைவி கல்பனா பாட்டியா என்பவரும் சேர்ந்து 150,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.01 கோடி ரூபாய்) அந்த அமைப்புக்கு நன்கொடை அளித்துள்ளனர். இந்த அந்த அமைப்பு கூறியுதுடன், அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். யாருக்கு வரும் இந்த தாராள மனது!

Views: - 0

0

0

Leave a Reply