ரஷ்ய தடுப்பூசியைத் தயாரிக்க இந்திய நிறுவனங்கள் ஆர்வம்..! ரஷ்ய முதலீட்டு வாரியத் தலைவர் தகவல்..!

16 August 2020, 10:47 am
Corona_Vaccine_Russia_UpdateNews360
Quick Share

கொரோனாவுக்கான ஸ்புட்னிக் வி எனும் தனது முதல் தடுப்பூசியின் உற்பத்தியை ரஷ்யா தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரசுக்கு உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி ஸ்பட்னிக் வி ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இருப்பினும், சில விஞ்ஞானிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தேசிய கௌரவத்தையே, ரஷ்ய அரசு அதிகம் எண்ணுவதாக அஞ்சுகின்றனர். மேலும் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த சில நாட்களில் இந்த தகவல் கசிந்துள்ளது. அப்போது தனது மகள்களில் ஒருவருக்கும் புதிய ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், ஸ்புட்னிக் வி’இன் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 மருத்துவ சோதனைகளின் தொழில்நுட்ப விவரங்களை இந்திய நிறுவனங்கள் அறிய முற்பட்டதாக ரஷ்யாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடகம் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

“ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 மருத்துவ சோதனைகளின் தொழில்நுட்ப விவரங்களை வழங்குமாறு இந்திய நிறுவனங்கள் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தை (ஆர்.டி.ஐ.எஃப்) கேட்டுக் கொண்டுள்ளன” என்று ரஷ்ய அரசாங்க ஊதுகுழலாகக் கருதப்படும் ஸ்புட்னிக் ஊடகம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் வி, கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியுடன் (ஆர்.டி.ஐ.எஃப்) இணைந்து இது உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசிய ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ், ரஷ்ய தடுப்பூசி குறித்து இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாங்கள் கண்டோம். இப்போது அவர்களுடன்,  இந்தியாவில் ஸ்புட்னிக் வி’இன் உற்பத்தி சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 42

0

0